13 September 2011

www.aradenamusic.com/

20 July 2011

எனக்கென ஒருத்தி....

எனக்கென ஒருத்தி

எனக்கென ஒருத்தி அவள் எங்கே இருக்கிறாளோ
எனக்கெனப் பிறந்த அவளை நான் இதுவரை காணவில்லை
நான் இதுவரை காணாதவளை நான் இன்னும் தேடுகின்றேன்
எனக்கெனப் பிறந்த அழகி அவள் எங்கே இருக்கிறாளோ

மான் விழியாளோ அவள் மரகத மொழியாளோ
மான் விழியாளோ அவள் மரகத மொழியாளோ
மெல்லிடையாளோ இல்லை மேனகை போன்றவளோ அவள்
மெல்லிடையாளோ ஒரு மேனகை போன்றவளோ

எனக்கென ஒருத்தி அவள் எங்கே இருக்கிறாளோ......

உன் அழகை காண்பதற்கு நான் நெற்றியில் ஓர் பொட்டு வைப்பேன்
நான் ஊரறிய உன் கழுத்தில் ஒரு மாலை ஏற்றிடுவேன் பூ மாலை ஏற்றிடுவேன்

விண்வெளியில் வீடு கட்டி நாம் வாழ்ந்து பார்ப்போமா
வெள்ளைப் புறா மீதில் ஏறி ஒரு ஊர்வலம் போவோமா
ப+விதழை விரித்து அதில் நாம் நித்திரையும் செய்வோமே
வானவில்லை எடுத்து அதை நாம் உடுத்தி திரிவோமே

எனக்கென ஒருத்தி அவள் எங்கே இருக்கிறாளோ......

மல்லிகையிற் ப+த்தொடுத்து நான் உன் தலையிற் சூட்டிடுவேன்
நான் உன் முகத்தை நிதம் பார்த்து என் வாழ்வில் மகிழ்ந்திடுவேன்
என் வாழ்வை வாழ்ந்திடுவேன்

வள்ளம் ஒன்றில் மிதந்து கடல் அலையைப் பிடிப்போமா
மின்னும் வெள்ளி எடுத்து அதில் ஒரு மாலை தொடுப்போமா
வெள்ளி மாலை போட்டு நாமும் இங்கு பாடித்திரிவோமே
அந்தி வான சூரியனை நாம் தொட்டுப் பார்ப்போமே

எனக்கென ஒருத்தி அவள் எங்கே இருக்கிறாளோ......

காதல் மொழியா....

காதல் மொழியா

காதல் மொழியா இல்லை உயிரின் வலியா
நிஜத்தின் உருவா இது நிழலின் கருவா
கண்கள் பேசுகின்ற மௌன மொழி இது
கனவில் வாழுகின்ற இன்பநிலை

இது ஒரு புதுவித உயிரின் ஏக்கம்
உணர்வுகள் உரசிடும் உறவின் தேடல்

நீயும் நானும் ஒன்று என்று வாழும் மயக்கம்

பூக்கள் மலரும் ஒலியின் இசையில் இதயம் இரண்டும் இடம்மாறும்
இமைகள் இமைக்க மறுக்கும் நொடியில் காதல் அங்கே அரங்கேறும்
நிமிடம் கூட மறக்க மறுக்கும் மனதின் எண்ணங்களே அந்த
நொடியில் தோன்றும் உயிரின் வலியை உணரும் ஸ்பரிசங்களே

இரு உயிர் உரு உடல் இது ஒரு இலக்கணம்
உறவுகள் மலர்கையில் இது ஒரு தனிரகம்

இன்பம் துன்பம் இரண்டும் கலந்து உயிரை வதைக்கும் மாயை

காதல் மொழியா இல்லை உயிரின் வலியா…………

தேடி அலைந்தால் கிடைக்காது இது தானேவந்தால் போகாது
உயிரைப் பரிசாய் கொடுக்க துணியும் உறவின் ஆழம் புரியாது
இதய நரம்பை மீட்டிப்போகும் புதிய ராகம் இது
வந்து உணர்வையெல்லாம் உரசிப்போகும் புதிய கீதம் இது

இரவுகள் கலைந்திடும் உறக்கங்கள் தொலைந்திடும்
கனவுகள் மலர்ந்திடும் கவிதைகள் பிறந்திடும்

இன்பம் துன்பம் இரண்டும் கலந்து உயிரை வதைக்கும் மாயை

காதல் மொழியா இல்லை உயிரின் வலியா…………

யாழ் நகர வீதியில்......

யாழ் நகர வீதியில்

யாழ் நகர வீதியில் நாம் சுற்றித்திரிந்த காலங்கள்
வல்லை வெளி நாம் சென்று காற்று வாங்கிய நேரங்கள்
நல்லூர் கந்தன் வீதியில் நாம் கம்பன் கழகம் பார்த்ததும்
ராஜா தியேட்டர் அரங்கிலே களவாய் சினிமா பார்த்ததும்
லேடிஸ் கொலிஜ் சுண்டுக்குழி வேம்படி வீதியெல்லாம்
சைக்கிளிலே சுற்றியது என் நெஞ்சில் சுற்றுதடா

சட்டநாதர் கோவிலில் அருணா கோஸ்டி பார்ப்பதும்
இளங்கலைஞர் மன்றத்தில் அரங்கேற்றம் பார்த்ததும்
சின்னமணி வில்லிசை சின்ன வயதில் பார்த்ததும்
மாவிட்டபுரம் கோவிலில் மாவிளக்குப்போட்டதும்

கீரிமலைக்கடலிலே நீச்சல் பழகப் போனதும்
கச்சான் கடை ஆச்சியோடு சண்டை பிடித்து ஓடியதும்
தட்டிவானில் ஏறி சன்னதிகோவில் போனதும்
அன்னதான மண்டபத்தில் வரிசையாக நின்றதும்
பண்டித்தளச்சி அம்மன் கோவில் பங்குனித்திங்கள் பொங்கலும்
வல்லிபுரக்கோவிலின் நாமம் அள்ளிப் பூசியதும்
நாகர் கோவில் மணல்காடு சவுக்கங்காட்டு தோப்பெல்லாம்
கப்பல் திருவிழா பார்த்தது என்நெஞ்சில் நிக்குதடா

துர்க்கை அம்மன் கோவிலில் பிரதட்டை அடித்ததும்
மாரியம்மன் கோவிலில் தீவட்டி பிடித்ததும்
சுட்டிபுரம் அம்மன் கோவில் சீர்காழி கச்சேரியும்
நயினை அம்மன் கோவிலுக்கு வள்ளத்திலே போனதும்

விக்னா ரியூசன் போனதும் சயன்ஸ் ஹோலில் படித்ததும்
நேற்றுப்போல தெரியுது இது வாழ்வில் மறக்குமா
பள்ளிக்கூடம் போகாமல் பிக்மச் பார்க்கப்போனதும்
வாத்தியாரைக் கண்டதும் கூட்டத்திலே மறைந்ததும்

யாழ் நகர வீதியில் நாம் சுற்றித்திரிந்த காலங்கள்
வல்லை வெளி நாம் சென்று காற்று வாங்கிய நேரங்கள்
நல்லூர் கந்தன் வீதியில் நாம் கம்பன் கழகம் பார்த்ததும்
கைலாசபதி கலையரங்கில் கலர்ஸ் நைட்பார்ததும்
லேடிஸ் கொலிஜ் சுண்டுக்குழி வேம்படி வீதியெல்லாம்
சைக்கிளிலே சுற்றியது என் நெஞ்சில் சுற்றுதடா

யாழ் நகர வீதியில் நாம் சுற்றித்திரிந்த காலங்கள்
வல்லை வெளி நாம் சென்று காற்று வாங்கிய நேரங்கள்