
புரியாத புதிர்
கானகத்து பாதையிலே
கானல் நீர் தெரியுதடி
கானகத்து மான் கூட்டம்
பாதை வழி ஓடுதடி
ஓடுகிற நீரோட்டம்
ஓர்; நிமிடம் சிரிக்குதடி
சிரித்துவிட்டு நீரோட்டம்
தன்பாதை வழி செல்லுதடி
ஓடுகிற மானினமோ
புரியாமல் ஓடுதடி
ஓரிடத்தில் புரிந்து கொண்டு
வாடாமல் வாடுதடி
நீரோட்டம் கரைசேர்ந்து
ஆற்;றோடு கலந்ததடி
ஆறோடும் திசை பார்த்து
நீரோட்டம் பாய்ந்ததடி
கானகத்து மான் கூட்டம்
கண் கலங்கிப் போனதடி
புரிய வைத்த நீரோட்டமதை
புகழ்ந்துமே பாடுதடி